"நீட் தேர்வு மூலம் அரசுப்பள்ளி மாணவர்கள் பலன் பெற்றுள்ளனர்" - பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை

0 3404

நீட் தேர்வு முறை மூலம் தமிழக அரசு பள்ளி மாணவர்கள், குறிப்பாக, ஏழை, எளிய கிராமப்புற மாணவர்கள் பலன் பெற்றுள்ளனர் என்றும் நீட் தேர்வால், சமூக நீதி ஒருபோதும் பாதிக்கப்படவில்லை எனவும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறினார். சென்னை தி.நகரிலுள்ள பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இவ்வாறு கூறினார்.

ஆளுநர் ஆர்.என்.ரவி மசோதாவை புறக்கணிக்க காரணம் என்ன கூறியுள்ளார் என மாநில அரசு தற்போது வரை தெளிவாக கூறவில்லை. ஆளுநர் கேள்விக்கு முழு பதிலை தமிழக அரசு அளித்த பிறகு அனைத்து கட்சி கூட்டம் கூட்டம் நடத்தினால் பாஜக முதல் கட்சியாக பங்கேற்கும்.

நீட் மசோதாவை முதன் முதலில் 2010 டிச.21 ல் நாடாளுமன்றத்தில் , திமுகவை சேர்ந்த மத்திய அமைச்சர் காந்தி செல்வன் தாக்கல் செய்தார். இருளர் , மலைவாழ் பழங்குடியினர் நீட் மூலம் முதன்முறை எம்பிபிஎஸ் படிப்பிற்கு தேர்வாகியுள்ளனர்.

2014 பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு 84 சதவீத மருத்துவ இடங்கள் அதிகரிப்பு. தமிழக மருத்துவ கல்லூரி இடங்கள் இரட்டிப்பாக அதிகரிப்பு.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments